நம்மில் பல பேர் அடிக்கடி வேலை மாறிக்கொண்டு இருப்பார்கள்.அதற்கு காரணம் கேட்டால் எனக்கு பிடிக்கவில்லை என் உயர் அதிகாரி எனக்கு எதிராக செயல்படுகிறார்,அவருக்கு சாதகமான ஆட்களுக்கு எல்லாம் பன்றாங்க அப்படி,இப்பிடின்னு காரணம் சொல்லி கொண்டு அந்த சூழ்நிலையை பிடிக்காதவாறு மாற்றி கொண்டு இருப்பார்கள்.இந்த காரணத்தால் ஒரு சில ஆண்டுகளில் நான்கு அல்லது ஐந்து கம்பெனி மாறிடுவாங்க இதுவே அவங்களுக்கு அடுத்து கிடைக்க கூடிய வாய்ப்புக்கு எதிர்மறையா அமைந்து விடுகிறது .
உண்மையிலேயே அவர்களுடைய வளர்ச்சியை அவர்கள் வேலை பார்க்கும் கம்பெனி விரும்ப வில்லையா என்று சந்தேகங்கள் நெறய எழுகின்றன .தொடர்ந்து குற்றம் சொல்பவர்களுக்கு அங்கு இருக்க கூடிய சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் வர வேண்டும். எல்லாரும் ஒரு மித்த கருத்து சிந்தனையோடு இருப்பார்கள் என்று சொல்ல முடியாது அதனால் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களையும் மாற்றி கொள்ள வேண்டும் .ஏற்றவாறு ஒரு இடம் பாக்க வேண்டும் என்றால் இந்த உலகத்தில் அப்படி ஒரு இடம் இல்லை அப்படி நினைத்தால் நம்மளால் வெற்றி பெற முடியாது .அதே மாதிரி எனக்கு மட்டும் தான் இப்படி நடக்கிறது என்றும் நினைக்க கூடாது .
எல்லா மனிதர்களுக்கும் தங்களுடைய வேலை மற்றும் வாழ்க்கையில் நிறைய சவால்கள் இருக்கின்றன .அதனால் எல்லா வகையான சவால்களை சமாளிக்கும் அளவுக்கு அறிவும் மற்றும் புரிதலும் இருந்தால் போதும் எளிதாக வெற்றி பெற முடியும் .அதனால் நமக்கு ஏற்றவாறு உலகத்தை மாற்ற முடியாது முடிந்தால் உலகத்துக்கு ஏற்றார் போல் நம்மளை மாற்றி கொண்டால் அணைத்து சவால்களையும் எதிர் கொள்ளலாம் .