காதல் விசயத்தில் மட்டும் யாரும் தங்களது அறியாமையை காட்டி கொண்டது இல்லை. இரு பாலரிலும் சில விதிவிலக்கும் உண்டு. அது தனி வகை மனிதப் பண்பு. எனக்கு தெரியாது என்று சொல்வதற்கு தனி தைரியம் வேண்டும். அந்த விசயத்தில் மட்டும் தைரியம் இன்மைதான் மிக ஆபத்தான விஷயம். காதல் தற்கொலைகளுக்கு காரணம் மிக அற்பமானதாகவே இருந்து விடுகிறது. சம்பந்தப்பட்ட காதல் ஜோடிகளுக்கு மட்டுமே புரிந்த ரகசியமாகவே இருந்துள்ளது. நமக்கு எல்லாமே தெரியும் என்பது போல் நடிக்கிறோம். நம் நடிப்பை நம்பி நாமே குழம்பிக் கொள்கிறோம். வாழ்வின் எல்லா பிரச்சினைகளுக்கும் நம்மிடம் பதில் இருப்பதில்லை. இங்கு பல மனிதர்கள் ''ஆண்பெண்'' யாராக இருந்தாலும் உடல்சார்ந்த கேள்வியை புரிந்து கொள்ளாமலே பதில் அளிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
மிக அவசரமான ஏமாற்று வேலையில் துல்லியமான இன்பம் சாத்தியம் இன்றிபோய் விடும்.. ''மேற்படி'' விசயத்தில் மட்டும் எல்லா விடைகளும் நமக்கு தெரிய வாய்ப்பு குறைவுதான். அது பரிணாம வளர்ச்சியில் நாம் வெளிவந்த குடும்பத்தின் மரபணுக்கள் சம்பந்தப்பட்டது. சில காதலில் ''காதலர் இருவருமே மூர்க்கத்தனமாக'' இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அது தனி குரூப். பல வருடகால காதல் அனுபவத்திலும் கூட சில வேதி வினைகள் தவறுவது உண்டு. ஆனால்,ஒரு நொடி தூண்டுதலில் திடீரென நடக்கும் காதலும் காமமும் கலந்த அதிரடியான நிமிடங்கள் இன்பக் கோட்டையின் அனைத்து கதவுகளும் திறக்கப்பட காரணமாகி விடுவதும் உண்டு. கேட்டுப் பெறுவது காதலில் இனிமை. கேட்டால் தருவது காதலர் கடமை. இன்பம் என்பது இருவரின் உரிமை. யார் கேட்டாலும் இளமைக்கு பெருமை....என்ன சரிதானே?. ஆதலினால், ஆழ்ந்து காதல் செய்வீர்.