உடலும் மனமும் ஒன்றோடொன்று தொடர்புடையது. இதில் ஒன்றில் ஏற்படுகிற பிரச்சனை மற்றொன்றையும் பாதிக்கும் என்பதை ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகாதரண் நம்மிடையே விவரிக்கிறார்
மூளையில் இருக்கும் அளவிற்கு நம்முடைய வயிற்றிலும் நியூரான்கள் செயல்படுகிறது. அந்த அளவிற்கு அதில் விசயமுள்ளது. வயிற்றுப்பகுதியில் சிறுகுடல், பெருங்குடல் உணவுப் பாதையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதைப் போல மனநிலை சிக்கலாக இருப்பவர்களுக்கு வயிறும் சிக்கலாக மாறிவிடும். மலச்சிக்கல் உருவாகும், அல்லது சாப்பிட்ட உடனேயே பாத்ரூம் போய் ஆக வேண்டிய நிலை உருவாகும். மலம் கழிக்கிற சுழற்சி என்பது சரியாக இல்லாமல் போகும்.
மூளைக்கும் வயிற்றுக்கும் கண்ணுக்கு தெரியாத இணைப்பு இருக்கிறது. அதைத்தான் ஆங்கிலத்தில் ’கட் ப்ரைன் அக்சிஸ்’ என்பார்கள். தலையில் உருவாகும் சிக்னல் என்பது வயிற்றுக்கு நேரடியாக போகும். எடுத்துக்காட்டாக, மிகவும் உயரமான பகுதிக்கு போனால் பயம் உருவாகும், அதனால் வயிற்றுப்போக்கும் தலை சுற்றலும் ஏற்படும்.. மன அழுத்தம் பெரும்பாலும் தலைவலியை கொண்டு வரும், அதே சமயம் வயிற்றையும் பாதிக்கும்.
செரோட்டின் என்கிற மகிழ்ச்சி ஹார்மோன் வயிற்றில் தான் சுரக்கும். சாப்பாடு சரியில்லாமல் வயிறு சிக்கலானால் மகிழ்ச்சியற்ற மனநிலைக்கு தள்ளப்படுவோம். குரோத் ஹார்மோன் பாதிப்புக்கு உள்ளாகும். தூக்கத்திற்கான சுரப்பிகள் பாதிக்கப்படும், டொபமைன் என்கிற மனநிலை சம்பந்தப்பட்ட ஹார்மோன்கள் போன்றவை இந்த கட் ப்ரைன் அக்சிஸ்சில் முக்கிய பங்கு வகிக்கக் கூடியது.
இன்சுலின், தைராய்டு, ஆகியவற்றிலும் ’கட் ப்ரைன் அக்சிஸ்’ சம்பந்தப்பட்டிருக்கிறது. மனநிலை சிக்கலானாலும், உணவு சரியில்லா விட்டாலும், தூக்கம் சரியில்லா விட்டாலும் நம்முடைய ஒட்டுமொத்த உடல் சிஸ்டமே குழம்பிப் போய்விடும். மனசு சரியில்லா விட்டால் உடம்பு சரியில்லாம போயிடும், உடம்பு சரியில்லா விட்டால் மனசு சரியில்லாமல் போயிடும். இரண்டுமே சுழற்சி முறையில் ஒன்றையொன்று கண்ணுக்கு தெரியாத இணைப்பாக உள்ளது. எனவே இதை ஒவ்வொன்றாக சீராக்கிக் கொள்ள வேண்டும். நமது எண்ணங்களை சரி செய்ய வேண்டும், நமது உணவை சரி செய்ய வேண்டும். அதன் வழியாக இந்த கட் ப்ரைன் அக்சஸை சரி செய்ய வேண்டும்.