Skip to main content

"மெட்ராஸ் ஐ-க்கு மிகச் சிறந்த மருந்து இதுதான்..."-  சித்த மருத்துவர் அருண் விளக்கம்

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

"Extract of this flower is the best remedy for Madras Eye"- Siddha Doctor Arun explained!


'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு சித்த மருத்துவர் அருண் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "எளிதில் குணமாக்கக் கூடிய நோய் தான் மெட்ராஸ் ஐ. இந்த நோய் தானாகவே குணமாகிவிடும். பெரும்பாலும் இந்த நோய்க்கு மருத்துவ சிகிச்சைத் தேவைப்படாது. நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே மெட்ராஸ் ஐ-யை சரி செய்து விடும்.ஒரு வேளை கண்களில் எரிச்சல் அதிகமாக இருக்கிறது; கண் வலி இருக்கிறது என்றால் அருகில் இருக்கக் கூடிய குடும்ப சித்த மருத்துவரை அணுகலாம். இந்த நோய்க்கு சித்த மருத்துவத்தில் மருந்துகள் இருக்கிறது. 

 

மெட்ராஸ் ஐ-க்கு மிகச் சிறந்த மருந்து நந்தியாவட்டை பூவின் சாறு. ஓரடுக்கு, ஈரடுக்கு, பல அடுக்கு நந்தியாவட்டை பூவின் சாறை எடுத்து பாதிக்கப்பட்ட கண்களில் இரண்டு அல்லது மூன்று சொட்டுகளை விட வேண்டும். இல்லை, பயமாக இருக்கிறது என்றால், நந்தியாவட்டை பூவை கண்ணில் வைத்து, சுத்தமான துணியை வைத்து கட்டிக் கொள்ளலாம். காளாப்பூவும் மெட்ராஸ் ஐ-க்கு சிறந்த மருந்து. இந்த மெட்ராஸ் ஐ நோயாளிகள், உடல் சூட்டைத் தணிக்கக் கூடிய உணவுகளைச் சாப்பிட்டுக் கொள்ளலாம். சிக்கன் மாதிரியான உடல் சூட்டை அதிகப்படுத்தும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். 

 

குளிர்ச்சியைத் தரக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றாக உறங்க வேண்டும். கண்களுக்கு ஓய்வு தேவை. நீண்ட நேரம் கண்விழித்து செல்போனில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். டிவி, கணினி உள்ளிட்டவைகளைப் பயன்படுத்துவதையும் இந்த நாட்களில் குறைத்துக் கொள்ள வேண்டும். இதுவும் ஒரு வகையான சிகிச்சை தான். 

 

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதாலும் நோயின் தீவிரத்தைக் குறைக்க முடிவும். நல்லெண்ணெய், விளக்கெண்ணெய்யை தேய்த்து குளிப்பதனால் நோய் விரைவாகக் குணமாகும். இளநீர், மிளகுப்பால் ஆகியவற்றைப் பருகுவது நோயின் தீவிரத்தைக் குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய இஞ்சி, ஏலக்காய், மிளகு சார்ந்த உணவுகளை இந்த காலகட்டத்தில் எடுத்துக் கொள்ளும் போது நோய் விரைவாக குணமாவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

 

மெட்ராஸ் ஐ மூன்று நாட்களில் சரியாகிவிடும். நோயின் தாக்கத்தின் தீவிரமாக ஒரு சிலருக்கு வலியுடன் 15 நாட்கள் வரைக்கும் நீடிக்கலாம்." இவ்வாறு சித்த மருத்துவர் தெரிவித்தார்.