உளவியல் தன்மை கொண்ட பல்வேறு வகையான தகவல்களைப் பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில் குழுவாக சிந்தித்தல் என்றால் என்னவென்று விளக்குகிறார்.
குழுவாக சிந்தித்தல் என்பதற்கும் சமூகத்தோடு ஒன்றிணைந்து இருப்பதற்குமான வித்தியாசம் உண்டு. குழுவாக சிந்தித்தலின் போது முடிவினை எடுத்தாக வேண்டும். சமூகத்தோடு ஒன்றிணைந்து போவதற்கு ஏற்கனவே நடைமுறைப்படுத்துவதை கேள்வி கேட்காமல் அப்படியே பின்பற்றுவதாகும்.
ஒரு உதாரணத்திற்கு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது மருத்துவ மாணவர்களுக்கு ஸ்டெதஸ்கோப் பயன்படுத்துவது மிகவும் சுவாரசியமாக இருக்கும், மூத்த மருத்துவர் இதய துடிப்பு சத்தம் வகைப்படுத்தி கேட்கிறதா என்று கேட்பார். உடனே மருத்துவ மாணவர்களும் கேட்கிறது என்று மொத்தமாக சொல்லி வைப்பார்கள். நமக்கு கேட்கிறதோ கேட்கவில்லையோ ஆனால் கேட்கிறது என்று சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஆம் என்று சொல்லி வைப்பார்கள் இதுதான் குழுவாக சிந்தித்தல் ஆகும்.
ஒருவேளை, நமக்கு கேட்கவில்லையே என்ற எண்ணம் தோன்றினாலும் நமக்கு தான் கேட்கவில்லை, மற்றவர்களுக்கு சத்தம் கேட்கிறதே அதனால் நாமும் சரியென்று ஏற்றுக் கொள்வோம் என்றும் சில சமயம் முடிவெடுப்பது. ஒருத்தர் மட்டும் கடைசி வரை உறுதியாக எனக்கு கேட்கவில்லை என்று சொல்லிவிட்டால் அவரை வித்தியாசமாக பார்ப்பதும், கையாள்வதும் நடக்கத்தான் செய்யும். ஆனால் அவர் அறிவியலின்படியும் விஞ்ஞானத்தின்படியும் சரியாகக் கூட இருப்பார்.
தமிழகத்தில் பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று எல்லாருமே நம்பினார்கள். விஞ்ஞானிகள் மட்டுமே கேபிலரி ஆக்சன் என்று உறிஞ்சும் தன்மை குறித்து நிரூபித்தார்கள். ஆனால் பெரும்பான்மை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆஞ்சநேயர் அழுகிறார் என்று சொன்னார்கள் எல்லாருமே ஏற்றுக் கொண்டார்கள். இதையேத்தான் குரூப் திங்கிங் என்று சொல்கிறோம்.