Skip to main content

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு வயிறு பிரச்சனையா?  -  ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் ஹெல்த் டிப்ஸ்

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Dr Suganthan | Digestion tips

 

தீபாவளி தின்பண்டங்கள் அதிகம் சாப்பிட்டு வயிறு மந்தமாகவே இருந்தால் பின்வருகிற டிப்ஸை பின்பற்றி சரி செய்து கொள்ளலாம் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன்

 

தீபாவளிக்காக தலையில் எண்ணெய் தேய்த்து குளித்திருப்போம். இப்போதைய பருவ கால மாற்றத்தால் இதில் உங்களுக்கு சளி பிடிக்க வாய்ப்பிருக்கிறது. மழை காலம் என்பதால் சுடுதண்ணீர் வைத்து குளிப்பது நல்லது. மேலும் ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கும் ராஸ்னாதி சூரணம் வாங்கி உச்சந்தலையில் வைத்தால் நல்லது. மேலும், கற்பூராதி தைலம் என்று கிடைக்கும். அதை வாங்கி தேய்த்து வருவதாலும் தலைவலி, சளி பிரச்சனைக்கு தீர்வாக அமையும்.

 

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு வயிறு மந்தமாக இருந்தால் ஓமம் சிறிதளவு எடுத்துக்கொண்டு, சுடுதண்ணியில் காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். வயிறு மந்தத்தால் வாந்தி எடுக்க முயன்றால், இதை குடிக்க வேண்டும். அப்போது இது சரியாகும். 

 

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு மலச்சிக்கல் ஏற்பட்டால் ஓமம், சீரகம், இந்து உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அவற்றை வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இரவு சுடுதண்ணீரில் கலந்து குடித்தால், காலையில் சிக்கல் சரியாகிவிடும். வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களைப் பயன்படுத்தி தீபாவளி தீனியால் வரும் பிரச்சனைகளை சரி செய்து கொள்ளலாம்.

 

கடையில் தீபாவளி லேகியம் என்றே வைத்திருப்பார்கள். அவையெல்லாம் இது போன்ற வீட்டில் கிடைக்கும் மளிகை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுபவையே என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.