Skip to main content

முனைவர் ஹாஜாகனியின் தன்னம்பிக்கைப் பாடல்! துயரிலிருந்து மீள்வோம்!

Published on 22/07/2020 | Edited on 22/07/2020
aaroor-puthiyavan-munaivar-hajakani-song-overcoming-sadness-and-depression

 

கரோனா காலத்தில் மக்கள் அனைவருமே பெரும் துயரத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிக்கல். சிலருக்குப் பொருட்சிக்கல். சிலருக்குத் தொழிற்சிக்கல். சிலருக்கு வீட்டுச் சிக்கல்கள். சிலர் தனிமையால் தற்கொலை செய்துகொள்கின்றனர். சிலர் மனச்சிதைவால் அவதிப்படுகின்றனர்.

 

தனிமை, வெறுமை, தோல்விகளில் துவண்டிடுதல் என்று மனித உணர்வுகள் அனைத்தும் உச்சத்தில் உள்ள கரோனா காலத்தில் அவர்களுக்கு தெம்பூட்டும் வகையில் முனைவர் ஹாஜாகனி அவர்கள் பாடல் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.

 

‘சோதனைப் பேரலைகள் சுழற்றி அடித்ததால் எதிர்காலமே இருண்டு போனதாய் மிரண்டு நிற்கிறான்.. நலிந்துபோன அவனுக்கு நம்பிக்கைப் பேரொளியைப் பாய்ச்ச வருகிறது இந்தப் பாடல்’ என்ற முன்னுரையோடு தொடங்குகிறது இந்தப் பாடல்.

 

உலகம் தந்த துயரம் உனக்கு

கரையில் கரையும் நுரைதான்

மனதில் நீயும் சுடரைக் கொடுத்து 

துயரம் துவளும் வரைதான் உன்னைக் கொஞ்சம் சிந்தித்துப்பார்

விண்ணை விட நீ உயரம் தான்

துன்பங்களை சுட்டெரித்தால்

இன்பம் உன்னைத் தேடித் தேடித் தேடி வருமே!

 

என்று துயரத்தைக் கடலின் கரையில் வந்து கரையும் நுரையாக ஒப்பனை செய்துள்ள வரிகளின் மூலம், ‘நீ வெற்றி அடையும் வரை, மீண்டெழும்வரை அந்த நுரைகள் சூழ்ந்துகொண்டே தான் இருக்கும். வெற்றியின் கரையை அடையும் போது உன்னை நீ விண்ணை விடப் பெரியவனாக உணர்வாய். துன்ப நுரைகள் கலைந்து இன்பம் தேடித் தேடி வரும்’ என்று தன்னம்பிக்கை ஊட்டுகின்றார்.

 

வெளிச்சமும் இரவைக் கடந்தால் தான், மண்ணைத் தோண்டிப் புதைத்தாலும் விண்ணைத் தீண்டும் விதை நீ!

 

என்று இற்கையோடு ஒப்பிட்டு மனதிற்கு நம்பிக்கையூட்டும் வரிகளை இனிமையான இசையோடு வழங்கியிருக்கிறார்.

 

வா நீ வாழ்வை வெல்வோம்! வா நீ வானம் வெல்வோம்! என்று புத்துணர்ச்சியும் தன்னம்பிக்கையும் ஊட்டும் இந்தப் பாடலை ஆரூர் புதியவன் @ பேரா. ஹாஜாகனி இயற்றியிருக்கிறார்.  எம். கார்திக் என்பவர் இசையமைக்க, ஜாத்தாவேதா சட்டர்ஜீ மற்றும் அனிதா ஆகியோர் பாடியிருக்கின்றனர். பாடலின் முன்னுரை வரிகளை சதக்கத்துல்லா என்பவர் எழுதியிருக்கிறார். காட்சித் தொகுப்பு: சலீம் சகியுல்லாஹ் கான்; தயாரிப்பு: ஸ்விஸ் வானொளி அஜீவன்.