
வழக்கறிஞர் பணியை விட தமிழறிஞர் பணியே சிறந்தது என தமிழறிஞராக வலம் வந்தவர். ஆக்ஸ்போர்டு உருவாக்கிய பேரகராதி போல் தமிழ்ப் பேரகராதி உருவாக்கி சாதனை படைத்தவர் தமிழறிஞர் வையாபுரி.
திருநெல்வேலி மாவட்டம் சிக்கநரசய்யன்பேட்டை கிராமத்தை சேர்ந்த சரவணப்பெருமாள் – பாம்பம்மாள் தம்பதியரின் மகனாக 1891 அக்டோபர் 12ந்தேதி வையாபுரி பிறந்தார். இந்த தம்பதிக்கு மூத்த மகன். தீவிர சிவ பக்த குடும்பம். சரவணப்பெருமாளின் பக்திக்கு இடையூராக இருந்ததால் தனது வருவாய்த்துறையில் பணியாற்றினார். அந்த வேலையை விட்டுவிட்டு சாமியராக போய்விட்டார். இதில் குடும்பத்தில் பெரும் குழப்பம், அதுப்பற்றி அவர் கண்டுக்கொள்ளவில்லை.
பாளையங்கோட்டை சவேரியார் பள்ளியில் பள்ளியில் வையாபுரியை சேர்த்தார். திருநெல்வேலியில் அப்போது இருந்த இந்துக்கல்லூரியிலும் படித்தார். கணக்கு பாடம் என்றால் அவருக்கு வேப்பங்காயாக கசக்கும், இதனால் குறைவான மதிப்பெண்ணே பெற்றார். சென்னை கிருஸ்த்துவ கல்லூரியில் பி.ஏ படித்து பட்டம் பெற்றார். பட்டத்தோடு மாகாணத்திலேயே அதிக மதிப்பெண் எடுத்தவகையில் தங்கபதக்கமும் பெற்றார். தனது ஊரில் நடைபெற்ற இலக்கிய கூட்டம் ஒன்றில் நெடுதல்வாய் நக்கீரரோ என்கிற இலக்கிய சொற்பொழிவு நிகழ்த்தினார்.
கல்லூரி படிக்கும் போது 1912 ஜீன் 5ந்தேதி 21 வயதான வையாபுரிக்கு சிவகாமி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சேர்ந்து படித்து வழக்கறிஞரானவர் சுமார் 10 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார். வழக்கறிஞர் தொழிலில் இருந்தாலும் தமிழ் குறித்து நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பினார். அவைகள் வெளிவந்து தமிழறிஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் வழக்கறிஞர் தொழிலில் இருந்து படிப்படியாக விலகி இயல்பிலேயே இருந்த தமிழ் ஆர்வத்தால் தமிழறிஞர்களுடன் நெருக்கமாக இருந்தார்.
திருநெல்வேலியில் கம்பன் கழகத்தை உருவாக்கினார். 1922ல் முதன்முதலாக இவர் பதிப்பித்த நூல் மணோன்மணியம். ஓலைச்சுவடிகளை ககிதத்துக்கு மாற்றியதோடு, அதன் காலத்தை ஆய்வு செய்து வெளியிட்டார். 1926 சென்னை பல்கலைக்கழகம் தமிழ்ப்பேரகராதி என்கிற நூலை உருவாக்கியது. அந்த நூல் உருவாக்க குழுவின் தலைவராக இருந்தவர் வையாபுரி. ஆக்ஸ்போர்டு பேரகராதிக்கு இணையானது தமிழ்ப் பேரகராதி என்கிற பெயர் பெற்றது இவர் தலைமையிலான குழு. அதன்பின் கேரளாவின் திருவிதாங்கூர் பல்கலைகழகத்தில் இருந்த தமிழ்த்துறையின் தலைவராக வையாபுரிப்பிள்ளை பணிற்றினார். அப்போது மலையாளத்துக்கான சொற்களஞ்சியத்தை உருவாக்கியதில் பெரும்பங்கு வையாபுரிப்பிள்ளையை சாரும்.
1936ல் சென்னை பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி துறை தலைவராக பதவி வகித்தார். இந்த வையாபுரிப்பிள்ளையிடம், பிற்கால தமிழ் அறிஞரும், திராவிட பல்கலைகழகத்தின் பிதாமகரும், தஞ்சை பல்கலைகழகத்தின் முதல் துணை வேந்தருமான வ.ஐ.சுப்பிரமணி அவரிடம் தமிழ் கற்றார். அவரின் அன்பு மாணவராக இருந்ததால் வையாபுரிப்பிள்ளையின் தமிழ் வாரிசு சுப்பிரமணியம் என்றார்கள் தமிழறிஞர்கள்.
சுமார் 3 ஆயிரம் நூல்கள் அவரது வீட்டில் இருந்தன. தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டும்மல்லாமல் ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்ச் நூல்களும் இருந்தன. அதோடு, நூற்றுக்கணக்கான ஓலைச்சுவடிகளும் இருந்தன. அவைகளை கல்கத்தா என்கிற கொல்கத்தா தேசிய நூலகத்துக்கு வழங்கிவிட்டார் வையாபுரி.
நூற்றுக்கணக்கான கட்டுரைகளளை எழுதியுள்ளார். அதோடு தமிழர் பண்பாடு, இலக்கிய தீபம், இலக்கிய உதயம், திராவிட மொழிகளில் ஆராய்ச்சி, இலக்கிய விளக்கம், காவியகாலம், அகராதி நினைவுகள், தமிழின் மறுமலர்ச்சி போன்ற நாற்பதுக்கும் அதிகமான நூல்களை இயற்றியுள்ளார். அதோடு 50க்கும் அதிகமான நூல்களை பதிப்பித்து, வெளியிட்டுள்ளார். கிமு காலத்தை சேர்ந்த சங்க இலக்கிய நூல்களை கிபிக்கு பிறகானது என்றார் வையாபுரி. அதோடு, சமஸ்கிருதத்தை கொண்டாடியதால் தமிழறிஞர்கள் பலரும் வையாபுரியுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தனர். திராவிட இயக்க தலைவர்களும் அவர்களுடன் கைகோர்த்துயிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
வையாபுரி – சிவகாமி தம்பதிக்கு 4 பெண்கள், 3 ஆண் பிள்ளைகள். சிவகாமி தனது பிள்ளைகளை சிறப்பாக படிக்கவைத்தார். 1956 பிப்ரவரி 17ந்தேதி தனது 65வது வயதில் மறைந்தார் வையாபுரிப்பிள்ளை.
- ராஜ்ப்ரியன்