கரோனா வைரஸ் பரவுதல் காரணமாக அரசுகள் மதுக்கடையை மூடியுள்ளது.மிக அருமையான விஷயம். குடியை விட முடியாத குடி நோயாளிகள் மது கிடைக்காத இந்த ஒரு சூழலில் பல குடும்பங்களை அழிக்கும் மோசமான மதுப் பழக்கத்திலிருந்து விடுபட முயற்சி செய்யலாம். மரண சாசனம் மதுவுக்கு.

தெருக்கவிதை :

''கரோனா காய்ச்சல் வருமென

தனித்திருந்தேன் சிலநாளாய்

காய்ச்சிய சரக்கு ''வாவா'' என அழைக்க

சபலம் தலைக்கு ஏற ...

ஓடினேன் ஓடினேன் சரக்கைத் தேடி.

சரக்கோடு 'கொசுறாய்' கரோனா.

இப்ப நானும் 'குவாரண்டைன்'.

குடியால் செத்தவன் பலபேர்

குடி மறந்தால் வளரும் குடும்பம்.

குடிக்கும் அன்பரே..நண்பரே..

உசுரோட நீ இருந்தா மட்டும்

குடும்பம் அடையும் மகிழ்ச்சி''