Skip to main content

தமிழுக்கு ஈழத் தமிழர் அளித்த கொடை!!!

Published on 24/02/2018 | Edited on 24/02/2018

பிப்ரவரி – 24 – தமிழ் தட்டச்சு இயந்திரத்தின் தந்தையை முத்தையா பிறந்த நாள் 

 

தட்டச்சு இயந்திரம் பொதுவெளிக்கு விற்பனைக்கு வந்தது 1875ஆம் ஆண்டு. ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் வகையில் தான் அந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. 1930களில் தான் தமிழில் தட்டச்சு இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தது. அதனை உருவாக்கியவர் முத்தையா. அதனாலேயே அவர் தட்டச்சு இயந்திரத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.


 

Father of typewriting machine

 

இலங்கையில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள சுண்டிக்குளி என்கிற கிராமத்தில் பிறந்தவர் முத்தையா. இவருடைய தந்தை இராமலிங்கம். இவரது குடும்பம் பெரிய குடும்பம். இராமலிங்கத்துக்கு 5 ஆண் பிள்ளைகள், 4 பெண் பிள்ளைகள். அவர்களில் கடைக்குட்டி முத்தையா. இவர் 1886 பிப்ரவரி 24ந்தேதி பிறந்தார்.

 

சிறுவயதிலேயே தந்தை மற்றும் தாயாரை அடுத்தடுத்து இழந்தார். இருந்தும் படிப்பை இவர் இழக்க விரும்பவில்லை. இவரது சகோதர – சகோதரிகள் இவரையும் நன்றாக படிக்கவைத்தனர். 1907ல் மலேசியா நாட்டுக்கு அகதியாக சென்றார். அங்கு சென்றும் படித்தார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் இரயில்வேயில் பணியாளராக வேலைக்கு சேர்க்கப்பட்டார். அந்த வேலை வேண்டாமென சில ஆண்டுகளிலேயே வேலையை விட்டு நின்றுவிட்டார்.

 

Father of typewriting machine

 

சிங்கப்பூரில் செயல்பட்ட அய்ல்ஸ்பெரி என்கிற ஆங்கிலேய கம்பெனியில் எழுத்தராக பணியில் சேர்ந்தார். பின்னர் கணக்காளராக பணியில் அமர்த்தப்பட்டார். அங்கு பணியில் சேர்ந்தது முதல் தனது திறமைகளை வளர்த்துக்கொண்டார். தகவல்களை சுருக்கெழுத்தில் எழுதுவதை, படிப்பதை கற்றார். 1913ல் நடைபெற்ற ஆசியா அளவிலான சுருக்கெழுத்து போட்டியில் கலந்துகொண்டு சர்வதேச அளவில் பதக்கம் பெற்றார்.

 

சுமார் 30 ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் பணியாற்றினார். பணியாற்றியபோது, ஆங்கிலத்தில் டைப்ரைட்டிங் என்கிற தட்டச்சு இயந்திரம் புழக்கத்துக்கு வந்தது. அதில் நிறுவனத்துக்குத் தேவையான கடிதங்களை தட்டச்சு செய்தனர். அவரும் அதை செய்தார். ஆனால் தனது தாய்மொழியான தமிழில் தட்டச்சு செய்ய முடியவில்லையே என்கிற ஏக்கம் இருந்து வந்தது. அந்த ஏக்கமே அவரை தமிழ் தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடிக்கத் தூண்டியது.

 
Father of typewriting machine

 

 

தமிழில் உள்ள உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர் மெய் எழுத்து, ஆயுத எழுத்து,  247 எழுத்துக்களை தட்டச்சு பொறியில் உள்ள 46 விசைகளில் கொண்டு வருவது எப்படி என யோசித்தார். துணை எழுத்துக்கள், கொம்புகளை தனியாக ஒரே விசையில் கொண்டு வருவது எப்படி என திட்டமிட்டார். அவைகளை சீர் செய்தபோது 72 க்கு கீழ் குறைக்க முடியவில்லை. அதைக்கொண்டு முதலில் ஒரு தட்டச்சு இயந்திரத்தை மாடலாக உருவாக்கினார். பின்னர் அதில் திருத்தங்கள் செய்து மீண்டும், மீண்டும் முயற்சி செய்து தற்போது உள்ள தமிழ் தட்டச்சு விசைப்பலகையை உருவாக்கி சாதனை படைத்தார்.

 

1920ல் அதை ஜெர்மனியில் உள்ள சைடல் நவ்மான் என்கிற இயந்திர உற்பத்தி நிறுவனத்திடம் தந்து இயந்திரங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்தார். அதில் பெரும் பணம் கிடைத்தது. அந்த தொகையை கொண்டு மக்களுக்கு உதவி செய்தார். இலங்கையின் தமிழர் – சிங்கள இனமோதல்கள் குறித்து ஆங்கிலத்தில் நூல் எழுத தகவல்களை திரட்டி எழுதி முடித்தார். அது நூல் வடிவம் பெறும் முன்பே அவர் தனது 63வது வயதில் மறைந்தார்.

 

அவர் மறைந்தாலும் தமிழ் உலகத்துக்கு அவர் உருவாக்கி தந்துவிட்டு சென்ற விசைப்பலகையை தொடும்போதெல்லாம் அவர் பெயர் ஒலிக்கும்.

Next Story

மீண்டும் இணைந்தது 'கொம்பன்' கூட்டணி... பூஜையுடன் பணிகள் தொடக்கம்!

Published on 06/09/2021 | Edited on 06/09/2021

 

Viruman movie poojai

 

கிராம பின்புலம் கொண்ட கதைகளை இயக்குவதில் கைதேர்ந்தவரான இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கடைசியாக வெளியான 'புலிக்குத்தி பாண்டி' திரைப்படம் நேரடியாக சன் டிவியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தியை வைத்து படம் இயக்கும் முயற்சியில் இருந்த முத்தையா, கடந்த சில மாதங்களாக அப்படத்திற்கான ஆரம்பக்கட்டப்பணிகளில் ஈடுபட்டுவந்தார்.

 

இந்த நிலையில், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. ‘விருமன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார். இது, திரைத்துறையில் அவரது அறிமுகப்படமாகும். சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கான பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளன. சென்னையில் நடைபெற்ற பூஜை நிகழ்வில் இயக்குநர் ஷங்கர், பாலா, முத்தையா மற்றும் நடிகர் கார்த்தி, சூர்யா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படத்தைத் திரைக்குக் கொண்டுவரும் யோசனையில் உள்ள படக்குழு, முதற்கட்ட படப்பிடிப்பைத் தேனி சுற்றுவட்டாரப்பகுதிகளில் விரைவில் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

 

 

Next Story

சசிகலாவை சந்திக்கப்போகும் 2 எம்.எல்.ஏ.க்கள்! - அதிமுக தலைமை ஷாக்!

Published on 24/02/2021 | Edited on 24/02/2021

 

Two MLA's gonna be meet sasikala

 

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 9ஆம் தேதி காலை சென்னை வந்தார். சென்னை வந்த அவர் தி.நகரில் உள்ள வீட்டில் தங்கியிருக்கிறார். கடந்த 9ஆம் தேதியிலிருந்து பொதுவெளியில் தோன்றாமல் மௌனம் காத்துவந்த சசிகலா, 15 நாட்கள் கழித்து இன்று ஜெயலலிதா பிறந்த நாளை அவர் தங்கியிருக்கும் வீட்டில் கொண்டாடினார். அதன்பின் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் நெரில் வந்து சசிகலாவைச் சந்தித்தனர்.
 

Two MLA's gonna be meet sasikala


இந்நிலையில், அதிமுக கூட்டணியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் கருணாஸ் மற்றும் தனியரசு ஆகியோர் ஏற்கனவே சசிகலாவிற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் கருணாஸ் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் சசிகலா மூலமாகத்தான் எம்.எல்.ஏ. ஆனேன் எனத் தெரிவித்திருக்கிறார். அதேபோல், சசிகலா சென்னை வந்ததும் அவரை சந்திக்க நேரமும் கேட்டிருந்தார். ஆனால், சசிகலா விடுதலை ஆவதற்குமுன் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைமுடித்து சென்னை வந்ததால், அவர் சில நாட்களுக்கு யாரையும் சந்திக்கக் கூடாது, தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி அவரும் யாரையும் சந்திக்காமல் இருந்தார். தற்போது பொதுவெளிக்கு வந்திருப்பதும், சரத்குமார் உள்ளிட்டோரை சந்தித்திருப்பதும் அவர் தனது அரசியல் காய்களை நகர்த்த தொடங்கிவிட்டார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், விரைவில் கருணாஸ் மற்றும் தனியரசு ஆகியோரும் சசிகலாவை சந்திக்க உள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் இருக்கும் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இந்த நேரத்தில் சசிகலாவை சந்திக்கவிருப்பதாக வரும் தகவல்கள் அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

 

Two MLA's gonna be meet sasikala


மேலும் அதிமுகவில் இருக்கும் மற்ற கூட்டணிக் கட்சியினரும் சசிகலாவை சந்திக்க முனைப்பு காட்டுவதாகத் தெரிகிறது. இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் தெரிவித்ததாவது, “அதிமுகவை மீட்பேன் எனவும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். எம்.ஜி.ஆர். இறந்தபோது தமிழகத்தில் ‘ஜா’ அணி, ‘ஜெ’ அணி என இருந்தது. அதன்பின் ஜெ அணி மட்டும் நிலைத்தது. அதுபோல் தற்போது அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகள் சீராகி எதிர்காலத்தில் இணைந்துவிட்டால் தங்களது ஒரு சார்பு ஒத்துவராது எனத் தற்போதே இரண்டு பக்கமும் அவர்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தனர்.