
ஒரு லட்ச ரூபாய் மற்றும் கவிதை இளவரசர் பட்டத்திற்கான கவிதைப் போட்டியை, நக்கீரன் மற்றும் புனே ஸ்ரீபாலாஜி சொசைட்டி கல்வி நிறுவனம் இணைந்து நடத்துகின்றன. இதில் 2017, ஆகஸ்ட் மாதம் முதல் ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்கள் பலர் தங்கள் கவிதைகளை அனுப்பிவைத்தனர்.
அவற்றில் தேர்வான கவிதைகள் ஒவ்வொரு மாதமும் இனிய உதயம் இலக்கிய இதழில் வெளியிடப்பட்டு வந்தது. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிசெய்யப்பட்ட 36 கவிதைகள் கவிஞர்கள் பிறைசூடன், விவேகா மற்றும் பிருந்தா சாரதியிடம் ஒப்படைக்கப்பட்டன.
அவர்களது முடிவின்படி 36 கவிதைகளில் இருந்து தற்போது பத்து கவிஞர்களின் கவிதைகள் பிரித்தெடுக்கப்பட்டு, அவை கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தக் கவிதைகளில் இருந்து ஒரேயொரு கவிதை மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்குச் சொந்தமான கவிஞர் சிறப்பிக்கப்பட இருக்கிறார். டிசம்பர் 07ஆம் தேதி நடைபெற்ற கவிதைக் கோப்புகளை வைரமுத்து அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து ஒப்படைக்க, இனிய உதயம் இணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் மற்றும் நக்கீரன் உதவி ஆசிரியர் ச.ப.மதிவாணன் ஆகியோர் சென்றிருந்தனர்.
கவிப்பேரரசு கண்டெடுக்க இருக்கும் கவிதை இளவரசர் யார்? என்பதை அறிந்துகொள்ள இனிய உதயம் இலக்கியத் திங்களிதழோடு இணைந்திருங்கள்.