Skip to main content

இன்றைய ராசி பலன் -   11.03.2023 

Published on 10/03/2023 | Edited on 11/03/2023

 

today rasipalan -   10.03.2023 

 

இன்றைய  பஞ்சாங்கம்

11-03-2023, மாசி 27, சனிக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 10.06 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. சித்திரை நட்சத்திரம் காலை 07.11 வரை பின்பு சுவாதி. மரணயோகம் காலை 07.11 வரை பின்பு சித்தயோகம். சங்கடஹர சதுர்த்தி விரதம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள்.  இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

இன்றைய ராசி பலன் -   11.03.2023 

 

mesham

மேஷம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களோடு ஒற்றுமையாக செயல்பட்டு நற்பலன் அடைவீர்கள். உற்றார் உறவினர்களால் ஆதாயங்கள் உண்டாகும். 

 

reshabam

 

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் கைகூடும்.

 

3

மிதுனம் 

இன்று குடும்பத்தில் உடன்பிறந்தவர்கள் வகையில் மனசங்கடங்கள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் வீண் விரயங்கள் உண்டாகும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் அனுகூலப் பலன் கிட்டும். வேலையில் பணிச்சுமை குறையும்.

 

kadagam

கடகம்

இன்று தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

 

5

சிம்மம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

 

kannirasi

கன்னி

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் தோன்றி மறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன் கிட்டும்.

 

thulam

துலாம்

இன்று உங்களுக்கு பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிட்டும்.

 

viruchagam

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறைந்து மன மகிழ்ச்சி ஏற்படும்.​

 

danush

தனுசு

இன்று உங்களின் பலமும் வலிமையும் கூடும். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து விடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும்.

 

magaram

மகரம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகப் பலன் உண்டாகும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும்.

 

kumbam

கும்பம்

இன்று நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை உண்டாகும். நெருங்கியவர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலன் கிட்டும்.

 

meenam

 

மீனம்

இன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் தோன்றும். எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் காரியங்களில் காலதாமதம் ஏற்படும். மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது.