Skip to main content

இன்றைய ராசிப்பலன் - 06.07.2019

Published on 06/07/2019 | Edited on 07/07/2019

கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய  பஞ்சாங்கம்
06-07-2019, ஆனி 21, சனிக்கிழமை, சதுர்த்தி திதி பிற்பகல் 01.10 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. மகம் நட்சத்திரம் இரவு 10.10 வரை பின்பு பூரம். அமிர்தயோகம் இரவு 10.10 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1.2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. 
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

mesham

மேஷம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெற்றோரிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். மனஅமைதி குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். இதுவரை இருந்த கடன் பிரச்சினைகள் குறையும்.

reshabam

ரிஷபம்

இன்று செய்யும் செயல்களில் சற்று மந்தநிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

3

மிதுனம்

இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

kadagam

கடகம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிந்தித்து செய்வதே சிறந்தது. எதிர்பாராத விரயங்களால் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

5

சிம்மம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

kannirasi

கன்னி

இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வீட்டிற்கு புதிய பொருள் வந்து சேரும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

thulam

துலாம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.

viruchagam

விருச்சிகம்

இன்று உறவினர்களால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல முன்னேற்றத்தை தரும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும்.

danush

தனுசு

இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

magaram

மகரம்

இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. தூர பயணங்களில் கவனம் தேவை.

kumbam

கும்பம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்படைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உடன்பிறப்பிடம் இருந்த பிரச்சினைகள் நீங்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். வருமானம் பெருகும்.

meenam

மீனம்

இன்று பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். பொன் பொருள் சேரும்.