Skip to main content

உலகளவில் 64.74 லட்சம் பேருக்கு கரோனா!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

world wide coronavirus peoples usa, italy


உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 


உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64,74,075 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,81,718 ஆக அதிகரித்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 30,06,831 ஆக உயர்ந்துள்ளது. 

அமெரிக்காவில் புதிதாக 21,882 பேருக்கு கரோனா உறுதியானதால் பாதிப்பு 18,81,205 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ரஷ்யாவில் 4,23,741, ஸ்பெயினில் 2,87,012, பிரிட்டனில் 2,77,985, பிரேசிலில் 5,56,668, இத்தாலியில் 2,33,515, பிரான்சில் 1,89,220, ஜெர்மனியில் 1,84,091, துருக்கியில் 1,65,555, ஈரானில் 1,57,562, சீனாவில் 83,022 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 
 


அமெரிக்காவில் கரோனாவுக்கு புதிதாக 1,134 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,08,059 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் 5,037, ஸ்பெயினில் 27,127, பிரிட்டனில் 39,369, பிரேசிலில் 31,278, இத்தாலியில் 33,530, பிரான்சில் 28,940, ஜெர்மனியில் 8,674, துருக்கியில் 4,585, ஈரானில் 7,942, சீனாவில் 4,634 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை உயிரிழந்துள்ளனர். 


 

 

 

சார்ந்த செய்திகள்