உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 82,56,257 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,45,937 ஆக அதிகரித்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 43,06,089 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் ஒரே நாளில் 25,450 பேருக்கு கரோனா உறுதியானதால் பாதிப்பு 22,08,400 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ரஷ்யாவில் 5,45,458, ஸ்பெயினில் 2,91,408, பிரிட்டனில் 2,98,136, இத்தாலியில் 2,37,500, பிரான்ஸில் 1,57,716, பெருவில் 2,37,156, ஜெர்மனியில் 1,88,382, துருக்கியில் 1,81,298, சிலியில் 1,84,449, ஈரானில் 1,92,439 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
பிரேசிலில் ஒரே நாளில் 37,278 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 9,28,834 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் பிரேசிலில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,338 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 45,456 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் புதிதாக 44 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83,265 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தலைநகர் பெய்ஜிங்கில் 1,255 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கரோனாவுக்கு ஒரே நாளில் 849 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,19,132 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் 7,284, பெருவில் 7,056, ஸ்பெயினில் 27,136, பிரிட்டனில் 41,969, பிரேசிலில் 31,278, இத்தாலியில் 34,405, பிரான்ஸில் 29,547, ஜெர்மனியில் 8,910, துருக்கியில் 4,842, ஈரானில் 9,065, சீனாவில் 4,634 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை உயிரிழந்துள்ளனர்.