உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,04,381 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,33,839 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,39,144 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் மேலும் 30,825 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 10,95,019 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் 2,39,639, இத்தாலியில் 2,05,463, பிரான்சில் 1,67,178, பிரிட்டனில் 1,71,253, ஜெர்மனியில் 1,63,009, துருக்கியில் 1,20,204, ரஷ்யாவில் 1,06,498, ஈரானில் 94,640, சீனாவில் 82,874, பிரேசிலில் 85,380, கனடாவில் 53,236, பாகிஸ்தானில் 16,473, சிங்கப்பூரில் 16,169, மலேசியாவில் 6,002, இலங்கையில் 663, சவுதி அரேபியாவில் 22,753, ஐக்கிய அரபு அமீரகத்தில் 12,481, கத்தாரில் 13,409 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கரோனாவுக்கு மேலும் 2,201 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 63,856 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஸ்பெயினில் 24,543, இத்தாலியில் 27,967, பிரான்சில் 24,376, பிரிட்டனில் 26,771, ஜெர்மனியில் 6,623, துருக்கி 3,174, ரஷ்யாவில் 1,073, ஈரானில் 6,028, பாகிஸ்தானில் 361, சிங்கப்பூரில் 15, மலேசியாவில் 102, இலங்கையில் 7, சவுதி அரேபியாவில் 162, ஐக்கிய அரபு அமீரகத்தில் 105, கத்தாரில் 10 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.