கனடாவில் மான்களை தாக்கும் 'ஜாம்பி வைரஸ்' என அழைக்கப்படும் ஒரு வகை நோய் பரவி வரும் நிலையில், இந்த நோயினால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடைபெற்றது. ஆராய்ச்சியில் இந்த நோய் மனிதர்களுக்கு பரவுவதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மான் வகைகளை மட்டும் குறிவைத்து இந்த நோய் தாக்கும் என அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இந்த நோய்க்கு சிகிச்சையோ, தடுப்பூசியோ இல்லை. இந்தநோயால் பாதிக்கப்பட்ட மானின் மூளை கட்டுப்பாட்டை இழக்கும், அதேபோல அதிக உமிழ்நீர் சுரப்பு, எடை இழப்பு போன்றவை இந்த ஜாம்பி நோயின் அறிகுறிகள் என்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது. ஜாம்பி நோயால் பாதிக்கப்பட்ட மான் இறைச்சியை உண்பவர்களுக்கு இந்த நோய் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.