Skip to main content

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 1 லட்சத்தைத் தாண்டியது!

Published on 28/03/2020 | Edited on 28/03/2020

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலகளவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27,341 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் ஒரே நாளில் சுமார் 3 ஆயிரம் பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். நேற்று (27/03/2020) உலகம் முழுவதும் 24 ஆயிரமாக இருந்த நிலையில் இன்று (28/03/2020) கரோனா பலி 27 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 

usa coronavirus incident world wide

உலகளவில் கரோனா பாதிப்பு 5,94,687 ஆக உயர்ந்த நிலையில் 1,33,057 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது. ஒரே நாளில் 18,294 பேருக்கு கரோனா உறுதியானதால் அமெரிக்காவில் பாதிப்பு 1,03,729 ஆக உயர்ந்துள்ளது. 

அமெரிக்காவில் புதிதாக 312 பேர் இறந்ததால் கரோனா உயிரிழப்பு 1,693 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் இறந்த நிலையில் கரோனா உயிரிழப்பு 9,134 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்த படியாக இத்தாலியில் 86,498 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

புதிதாக 773 பேர் இறந்ததால் ஸ்பெயினில் கரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,138 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் ஒரே நாளில் 7,933 பேருக்கு கரோனா உறுதியானதால் பாதிப்பு 65,719 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் கரோனாவால் 81, 394 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,295 பேர் உயிரிழந்தனர். உலகளவில் கரோனா பரவ காரணமான சீனாவில் 74,971 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

இந்தியாவில் கரோனாவால் 19 பேர் உயிரிழந்த நிலையில், உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது. 


 

சார்ந்த செய்திகள்