
தென் அமெரிக்க நாடுகளில் காணப்படும் லாமா விளக்கிலிருந்து கரோனா வைரஸ் எதிர்ப்பு பொருளைக் கண்டறியலாம் என டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒட்டகக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த லாமா விலங்கு தென் அமெரிக்க நாடுகளில் பண்ணை வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விலங்கின் உடலில் கரோனா வைரஸை அழிக்கக்கூடிய இயற்கை எதிர் பொருள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எஸ் புரோட்டின் எனப்படும் செல் நீட்சி மூலமாகவே கரோனா வைரஸானது மனித செல்களுக்குள் நுழைகின்றன. ஆனால் இந்த லாமாக்களில் உள்ள எதிர் உயிரிகள் வைரஸ்களில் உள்ள இந்த எஸ் புரோட்டின் நீட்சிகளைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை என டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்த ஆராய்ச்சிகள் தற்போதுதான் நடந்து வருகின்றன என்பதனால், உடனடியாக இதனை மனிதர்களுக்குச் சோதனை செய்ய முடியாது என்றும், விலங்குகளில் இதற்கான சோதனைகள் வெற்றிகரமாக முடிந்தால் மட்டுமே மனிதர்களுக்கு இதனை வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.