Published on 22/08/2020 | Edited on 22/08/2020
அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் விநாயகர் சதுர்த்திக்கு ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்துப் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் உலக மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். எல்லா தடைகளையும் கடந்து புதிய தொடக்கமாக இருக்க வேண்டும் என ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் போட்டியிடும் நிலையில், ஜனநாயகக் கட்சியில் துணை அதிபராக போட்டியிட கமலா ஹாரிஸ் எனும் தமிழக வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.