Published on 04/04/2019 | Edited on 04/04/2019
ஐக்கிய அரபு அமீரகமானது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான சையத் பதக்கம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த தகவலை அபுதாபியில் இளவரசரும், அந்நாட்டு ஆயுதப்படை தளபதியுமான ஷேக் முஹம்மது பின் சையத் தெரிவித்துள்ளார்.

இந்தியா உடனான தொன்றுதொட்ட நட்பின் வெளிப்பாடாகவும், பிரதமர் மோடியின் செயல்பாட்டை பாராட்டும் விதமாகவும் ஐக்கிய அமீரகத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.