பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப், இன்ஸ்டாகிரம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் கடந்த 4ம் தேதி நள்ளிரவு திடீரென முடங்கியது. இரவில் ஏற்பட்ட பிரச்சனை அதிகாலை வரை தொடர்ந்தது. நீண்ட முயற்சிக்கு பின்னர் அதிகாலையில் இந்த பக்கங்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. சுமார் 6 மணி நேரம் இந்த முடக்கம் நீடித்ததால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பேஸ்புக் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பேஸ்புக் டவுன் என்பதை இணையவாசிகள் ட்விட்டர் உள்ளிட்ட சில சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்தனர். பேஸ்புக் விற்பனைக்கு என்று கேலி செய்யப்பட்ட ஒரு புகைப்படத்தை ஷேர் செய்த டுவிட்டர் சிஇஓ ஜேக் டார்சி, அதன் விலை எவ்வளவு என்று கேட்டு நக்கலடித்துள்ளார். இவரின் இந்த கருத்துக்கு ஒரு தரப்பினர் வரவேற்பும் , மற்றொரு தரப்பினர் உங்களுக்கும் "அந்த நாள்" வரும் என்று கமெண்ட்டில் தெரிவித்து வருகிறார்கள்.