சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம் என்ற தமிழர் வெற்றி பெற்றுள்ளார்.
சிங்கப்பூரில் அதிபராக இருக்கும் ஹலிமா யாகூப்பின் பதவிக்காலம் செப்டம்பர் 13 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்தினம், இங் கொக் சொங் மற்றும் டான் கின் லியான் என மூன்று பேர் போட்டியிட்டனர். இந்நிலையில் அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம் 70.4 சதவித வாக்குகள் பெற்று அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இவரின் வெற்றியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் சிங்கப்பூரின் துணைப் பிரதமராகவும், கல்வி, நிதி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூரின் 9 வது அதிபராகப் பதவி ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.