Skip to main content

மஹிந்தா ராஜபக்சேக்கு நன்றி தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் !

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உயிராபத்து இருப்பதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் , தற்போதைய எதிர்கட்சி தலைவருமான மஹிந்தா ராஜபக்சே முன்னரே கூறி இருந்தார் . அதனைத் தொடர்ந்து இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று சுமார் 8 க்கும் மேற்பட்ட இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தனர் . இதில் சுமார் 250- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் . மேலும் 500 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது .

 

 

 

SUMANTHIRAN

 

 

இது தொடர்பாக சர்வதேச நாடுகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . அதே போல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மஹிந்தா எச்சரிக்கை விடுத்தார் . இது குறித்து சமூக வலைத்தளங்கல்  மற்றும் இலங்கை ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் , ஊடகப்பேச்சாளருமான எம் . ஏ .சுமந்திரன் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார் . அப்போது பேசிய அவர் "குண்டு தாக்குதலுக்கு " பின்னர் மட்டக்களப்பிற்கு வருமாறு மதகுரு ஒருவர் என்னை அழைத்தார் . அவரின் கோரிக்கை ஏற்று மட்டக்களப்பிற்கு  சென்று அங்கு உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கில் பங்கேற்றேன் . அந்த வேளையில் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சே தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டார்  .அப்போது என்னிடம் எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டார் .

 

 

SRI LANKA

 

 

 

அதற்கு நான் மட்டக்களப்பில் இருப்பதாக ராஜபக்சேவிடம் கூறினேன் . அதற்கு ராஜபக்சே அங்கேயே இருக்கிறீர்கள் என மீண்டும் கேட்டார் . மேலும் ராஜபக்சே என்னிடம் கூறுகையில் என்னுடைய உயிர்க்கு ஆபத்து இருப்பதாகவும் , அது குறித்து எனக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளதாக ராஜபக்சே என்னிடம் கூறினார் என சுமந்திரன் தெரிவித்தார் . அதன் தொடர்ச்சியாக வேலையை முடித்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டேன் என சுமந்திரன் தெரிவித்தார் . பின்பு நான்  மறுநாள் ராஜபக்சே இல்லத்திற்கு  நன்றி தெரிவித்தேன் . அப்போது அவர் என்னிடம் கூறுகையில் உங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. மேலும் அதை சொல்லவேண்டிய பொறுப்பு எனக்கு இருப்பதாக என்னிடம்  ராஜபக்சே கூறியதாக செய்தியாளர்களுக்கு சுமந்திரன்  தெரிவித்துள்ளார் .

 

 

 

 

சார்ந்த செய்திகள்