ஜப்பானில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் ஹொக்கைடோ என்னும் தீவில் இன்று அதிகாலை 3.08 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் சுமார் 40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில் இதனால் சுனாமி எச்சரிக்கை ஏதும் இல்லை என்றாலும் அத்தீவிலுள்ள 3 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரவசதி துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல வீடுகள் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் காணாமல் போயுள்ளனர் என அரசு கூறியுள்ள நிலையில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு உள்ள டோமரி தீவில் அணு உலைகள் மூன்று இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது எனவே ஜெனரேட்டர் மூலமாக மின்சாரம் விநியோகிக்கப்படுவதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.