
பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிய வேண்டும், மீறினால் நடவடிக்கை எடுக்கலாம் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சில இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஈரானில் கடந்த ஆண்டு மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு நாங்கள் இனி ஹிஜாப் அணியமாட்டோம் என தீயிட்டுக் கொளுத்தினர். இந்தப் போராட்டத்தில் 300 பேர் வரை கொல்லப்பட்டதாகவும், அதில் 40 பேர் சிறுவர்கள் எனவும் ஐ.நா தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிய வேண்டும். அப்படி ஹிஜாப் அணியாத மாணவிகள் மீது கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கலாம் என அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.