Skip to main content

பாக் தேர்தல் தொடங்கியது..முன்னாள் கிரிக் வீரர் வெற்றிபெறுவாரா ? 

Published on 25/07/2018 | Edited on 25/07/2018
pak

 

 

 

பாகிஸ்தானில் உள்ள 272 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலும், பஞ்சாப், சிந்து, கைபர் பக்துங்வா, பலுசிஸ்தான் மாகாண சட்டசபை தேர்தலும் இன்று காலை தொடங்கிவிட்டது. 

 

நாடு முழுவதும் 10 கோடி வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்கு செலுத்துவார்கள் என்று எண்ணப்படுகிறது. இத்தேர்தலை பாதுகாப்பாக நடத்த 8 லட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் சட்ட அமலாக்கத்துறையை சேர்ந்தவர்களையும் நியமித்துள்ளனர். 17,000 மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

 

 

 

இந்த 272 தொகுதிகளில் 60 தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுகின்றனர். பாகிஸ்தான் தேர்தல் வரலாற்றில் இத்தனை பெண்கள் போட்டியிடுவது இதுவே முதல் முறை ஆகும். மேலும், 5 திருநங்கைகள் போட்டியிடுகின்றனர். முன்னாள் பிரதமர் நாவாஸ் ஷெரிப்பின் கைதை தொடர்ந்து, இத்தேர்தலில் ந-பாகிஸ்தான் முஸ்லீம் கட்சிக்கு இருந்த மவுஸ் குரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . இந்த தேர்தலில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் கட்சி தெஹ்ரிக் - இ - இன்சாப் தான் வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.  

       

சார்ந்த செய்திகள்