Skip to main content

நேருக்கு நேர்..! என்ன நடந்தது மோடி, இம்ரான் கான் சந்திப்பில்...?

Published on 15/06/2019 | Edited on 15/06/2019

கிர்கிஸ்தான் நாட்டில் பிஷ்கேக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இரண்டு நாட்கள் நடந்த இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தான் அதிபர், ரஷ்யா அதிபர் புதின், சீன அதிபர் ஜிங்பின் உள்ளிட்டோரை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

 

modi and imran khan meets at shanghai meeting

 

 

ஆனாலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அவர் சந்திப்பதற்கான திட்டம் எதுவுமில்லை என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் நேற்று மாநாட்டில் மோடியும், இம்ரான்கானும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடி, இம்ரான்கானிடம் நலம் விசாரித்தார். பதிலுக்கு மோடியிடம் நலம் விசாரித்த இம்ரான்கான், தேர்தலில் வெற்றிபெற்றதற்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்தும் தெரிவித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்