இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் – பாகிஸ்தான் மிரட்டல்!
இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தவும் தயங்கமாட்டோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் அப்பாஸி மிரட்டியுள்ளார்.
நியூயார்க்கில் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான கவுன்சில் ஒன்றில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித், இந்தியாவின் அண்மைக்கால விமர்சனங்கள் பாகிஸ்தானை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளன. குறுகிய தூரம் சென்று தாக்கும் அணு ஆயுதங்களை பாகிஸ்தான் தயாராக வைத்திருக்கிறது. இந்தியா தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் அவற்றை ஏவவும் தயங்க மாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.
ஐ.நாவில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் பிரதிநிதிகளுடன் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையில் வடகொரியாவுக்கு பாகிஸ்தான் அணு ரகசியங்களை விற்கிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் அப்பாஸி இப்படி பேசியுள்ளதாக தெரிகிறது. வட கொரியா மட்டுமே அணு ஆயுத மிரட்டல்களை விடுத்து வரும் நிலையில், இந்தியாவின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் பேச்சு அமைந்துள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.