Published on 05/11/2021 | Edited on 05/11/2021

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு கரன்சிகளைப் பயன்படுத்த தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் அங்கு ஆட்சி பொறுப்பைக் கைப்பற்றினர். தலிபான்கள் கைக்கு ஆட்சி போனது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்கள். பெண்களுக்குக் கல்வியுரிமை மறுப்பு, வேலைக்குச் செல்ல தடை உள்ளிட்ட பல்வேறு பெண்கள் விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தனர். இதற்கு உலக நாடுகள் பலவும் தங்களின் எதிர்ப்பை பதிவுசெய்து வந்தன. இந்நிலையில், தற்போது உலக நாடுகளின் வெளிநாட்டு கரன்சிகளைப் பயன்படுத்த அந்நாட்டு மக்களுக்குத் தலிபான்கள் தடை விதித்துள்ளனர். இது அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.