Skip to main content

ஒரு உடைந்த ஃபோனை வைத்து உலக அளவில் பிரபலமான இளைஞர்கள்...

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

போதுமான எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் யூடியூபை பார்த்து கிராஃபிக்ஸ் கற்றுக்கொண்டு, உடைந்த ஸ்மார்ட் போனை வைத்து நைஜீரியா இளைஞர்கள் சிலர் அந்த நாட்டின் முதல் science fiction குறும்படத்தை இயக்கியிருக்கிறார்கள்.

 

nigerian youths scifi shortfilm shot by mobile goes viral

 

 

இவர்களின் படைப்பு தற்போது உலகம் முழுவதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. வடக்கு நைஜீரியாவில் உள்ள கடூனா என்கிற மாநிலத்தில் வசித்து வரும் 8 இளைஞர்கள் ஒன்றிணைந்து யூடியூபை பார்த்து கிராஃபிக்ஸ் கற்றுக்கொண்டு, பின்னர் ஸ்மார்ட் போன் மூலம் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் ரிப்பேர் ஆன ஒரு பழைய லேப்டாப் மூலம் எடிட்டிங் பணிகளை செய்துள்ளனர். பணம் கொடுத்து கிராஃபிக்ஸ் (Graphics) கற்றுக்கொள்ளவோ, படம் எடுக்க தேவையான கருவிகளை வாங்கவோ வழி இல்லாத நிலையில், இந்த இளைஞர்களின் முயற்சி பலரையும் வியப்படைய வைத்துள்ளது.

கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து, அதிநவீன உபகரணங்களின் உதவியோடு சயின்ஸ் ஃபிக்ஷன் படங்கள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஒரு உடைந்த ஸ்மார்ட் ஃபோனை மட்டும் வைத்து சயின்ஸ் ஃபிக் ஷன் குறும்படம் எடுத்த இவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர். உலக அளவில் பல பிரபலங்களும் இவர்களை வியந்து பாராட்டி வருகின்றனர். மேலும் திரைத்துறையை சேர்ந்த பலரும் தற்போது இந்த இளைஞர்களுக்கு உதவ ஆரம்பித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்