Skip to main content

நிலவில் மனிதர்கள் வாழும் வீடு...அமெரிக்கா, சீனா இணைந்து ஆராய்ச்சி...

Published on 21/01/2019 | Edited on 21/01/2019

 

tgj

 

சந்திரனின் இதுவரை யாரும் சென்றிடாத இருட்டு பகுதியை ஆராய்ச்சி செய்ய ‘சாங்-இ4’ என்ற விண்கலத்தை சீனா அனுப்பியுள்ளது. அந்த விண்கலம் இம்மாத தொடக்கத்தில் வெற்றிகரமாக சந்திரனில் தரை இறங்கியது. சீனாவின் இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது அமெரிக்காவும் சந்திரனில் தனது ஆய்வை தொடர திட்டமிட்டு வருகிறது. இதற்காக சீனாவுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது.  இதற்கான முதல்கட்ட ஆலோசனையை சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் நாசா தற்போது நடத்தியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு ஏதுவாக குடியிருப்புகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் மனிதன் நிலவில் குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன என கூறப்பட்டுள்ளது. மேலும் இதன் முதல் படியாக 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சந்திரனுக்கு ரோபோவை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்