Skip to main content

இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டவர் தோல்வி...

Published on 24/09/2018 | Edited on 24/09/2018
abdullah yameen

 

தெற்காசிய நாடான மாலத்தீவில் நேற்று நடந்த அதிபர் தேர்தலின் முடிவு வெளியாகியுள்ளது. இத்தேர்தலில் எதிர்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் முகமது வெற்றிபெற்றுள்ளார். மாலத்தீவு அதிபர் தேர்தலில் சுமார் 92 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. இதில் வெற்றிபெற்ற இப்ராகிம் முகமது 1,33,808 வாக்குகள் பெற்றுள்ளார். தற்போது அதிபாரக இருக்கும் அப்துல்லா யாமீன் 95,526 பெற்று தோல்வி அடைந்துள்ளார். மேலும் அண்மைக்காலமாக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அப்துல்லா யமீன் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எங்கள் மக்கள் இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறார்கள்” - மாலத்தீவு முன்னாள் அதிபர்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Former President of Maldives says Our people want to apologize to Indians

கடந்த ஜனவரி மாதம், லட்சத்தீவு சென்றிருந்த பிரதமர் மோடி, ஆழ்கடல் பகுதியில் நீந்தி பவளப் பாறைகளைப் படம் பிடித்த காட்சிகள் வெளியாகி இருந்தது. அதேபோல் கடற்கரை பகுதியில் அமர்ந்து சிந்திப்பதை போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாஜகவினரால் 'ட்ரெண்ட்' செய்யப்பட்டது. அதே நேரம் பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மாலத்தீவு அமைச்சர்கள் இருவரும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தியா குறித்து அவதூறு கருத்துகளைப் பதிவு செய்தனர். 

இந்த கருத்துகள் பல்வேறு விமர்சனங்களைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, ‘மூன்று அமைச்சர்களின் கருத்துக்கும் மாலத்தீவு அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்போர் மீது அரசுத் தரப்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என மாலத்தீவு அரசு விளக்கம் அளித்தது. இதைத் தொடர்ந்து, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கடந்த 7 ஆம் தேதி 3 அமைச்சர்களையும் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையான நிலையில், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மாலத்தீவுக்கான சுற்றுலா திட்டத்தை ரத்து செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது. அந்த சமயத்தில், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களுக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கண்டனம் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், தற்போது இந்தியாவிற்கு வருகை தந்துள்ள மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்திய மக்களின் புறக்கணிப்பு மாலத்தீவை மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. நடந்த நிகழ்வுகளுக்காக மாலத்தீவு மக்கள் மன்னிப்பு கேட்க விரும்புகிறார்கள் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய மக்கள் சுற்றுலாவுக்காக மாலத்தீவுக்கு வர வேண்டும்” என்று கூறினார். 

Next Story

இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு; மாலத்தீவு அதிபர் பதவிக்கு சிக்கல்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Maldivian president is in trouble for Stand against India

மாலத்தீவில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், சீன ஆதரவு நிலைப்பாடு உள்ள முகமது முய்சு வெற்றி பெற்று அதிபராகப் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, மாலத்தீவு அதிபர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டி இனி எந்த நாட்டு ராணுவத்திற்கும் இடம் கிடையாது என்று அறிவித்திருந்தார். 

இதனையடுத்து, கடந்த 15ஆம் தேதி மாலத்தீவில் முகாமிட்டிருக்கும் இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என அறிவித்தார். இது குறித்து அவர், ‘மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை மார்ச் 15 ஆம் தேதிக்குள் திரும்பப் பெற வேண்டும். மாலத்தீவில் இருந்து உடனடியாக இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு’ என்று தெரிவித்தார். சமீபத்தில் சீனப் பயணம் மேற்கொண்ட முகமது முய்சு, இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். மாலத்தீவு அதிபரின் இந்த அறிவிப்பால் இந்தியா - மாலத்தீவு இடையிலான விரிசல் மேலும் அதிகரித்து வந்தது. 

இந்த நிலையில், கடந்த 28ஆம் மாலத்தீவில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்ட 4 அமைச்சர்களுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெற வாக்கெடுப்பு நடைபெறுவதாக அந்த கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பு மோதலாக மாறியது. இதனால், நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனை தொடர்ந்து, நாடாளுமன்றம் நேற்று (29-01-24) மீண்டும் கூடியது. அப்போது, புதிதாக நியமிக்கப்பட்ட 4 அமைச்சர்களுக்கு ஒப்புதல் அளிக்க முக்கிய எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இறுதியில் அமைச்சரவையில் 1 அமைச்சரை மட்டும் சேர்க்க எதிர்க்கட்சி ஒப்புக்கொண்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர மாலத்தீவு ஜனநாயக கட்சி முடிவு செய்துள்ளது. 

இதற்கான தீர்மானத்தில் போதுமான எம்.பி.க்களிடம் கையெழுத்து பெறப்பட்ட நிலையில், இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மாலத்தீவு நாடாளுமன்றத்தில் 56 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றால் அதிபரை பதவிநீக்கம் செய்யும் வகையில் அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், 80 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஜனநாயகவாதிகள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு 68 எம்.பி.க்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.