Skip to main content

அதிவேக கார் பட்டியலில் ஃபெராரி, லம்போர்கினியை ஓரங்கட்டிய இந்திய நிறுவனம்...!

Published on 07/03/2019 | Edited on 07/03/2019

மஹிந்திரா குழுமத்தின் கிளை நிறுவனமான இத்தாலியைச் சேர்ந்த பினின்ஃபரைனா (Pininfarina) அதிவேக மின்சார காரை 2019 ஜெனீவா மோட்டார் கண்காட்சியில் முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் வரும் 2020-ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிவேக காருக்கு அந்நிறுவனம் பட்டிஸ்டா என்று பெயரிட்டுள்ளது. 

 

battista

 

பட்டிஸ்டா கார் 0.2 விநாடிகளில் 100 கி.மீ தூரத்தை கடக்கக்கூடிய திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஃபார்முலா 1 கார்பந்தயத்தில் பயன்படுத்தும் கார்களைவிட அதிகமான வேகம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

பட்டிஸ்டா காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 450 கி.மீ வரை பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019, ஜெனீவா மோட்டார் கண்காட்சியில் இது தொடர்பாக பேசிய பினின்ஃபரைனா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, இத்தாலியில் 150 பட்டிஸ்டா கார்கள் தயாரிக்கப்பட்டு ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுமெனத் தெரிவித்துள்ளார். 
 

இத்தாலி நிறுவனமான பினின்ஃபரைனாவை 2015-ம் ஆண்டு, இந்திய நிறுவனமான மஹிந்திரா குழுமம் 50 மில்லியன் யூரோகளை கொடுத்து வாங்கி தனது கிளை நிறுவனமாக மாற்றியது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பதவி விலகும் ஆனந்த் மஹிந்திரா...

Published on 21/12/2019 | Edited on 21/12/2019

மஹிந்திரா& மஹிந்திரா நிறுவன தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாக ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.

 

anand mahindra to resign his chairman post of mahindra and mahindra

 

 

20.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள மஹிந்திரா& மஹிந்திரா நிறுவனத்தில் அடுத்த 15 மாதங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பல முக்கிய நிர்வாகிகள் ஓய்வு பெற்று புதிதாக அடுத்த தலைமுறைக்கு பதவிகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஏப்ரல் 1, 2020 அன்று மஹிந்திரா& மஹிந்திரா குழுமத் தலைவர் பதவியிலிருந்து ஆனந்த் மஹிந்திரா விலக உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. செபி மற்றும் நிறுவன வாரியத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு இந்த மாற்றம் நடைபெற உள்ளதாகவும், ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார். தலைவர் பொறுப்பிலிருந்து ஆனந்த் மஹிந்திரா பதவி விலகினாலும், நிர்வாக பொறுப்பில் இல்லாமல் ஆனந்த் மகேந்திரா நிறுவனத்தை வழிநடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் விலை உயர்ந்த கார் இந்தியாவில்...!

Published on 26/11/2018 | Edited on 26/11/2018

 

aa

 

 

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது புதிய எஸ்யுவி அல்டுரஸ் ஜி4 காரை நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் விலை 26.95 இலட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுவரை வெளிவந்துள்ள மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் கார்களில் இதுவே அதிக விலைகொண்ட கார் என்பது குறிப்பிடத்தக்கது.