Skip to main content

தடுக்கிய விழுந்த பைடன் - வைரலாகும் வீடியோ! (வீடியோ உள்ளே)

Published on 20/03/2021 | Edited on 20/03/2021
JOE BIDEN

 

 

அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில், மூன்று மஜாஜ் நிலையங்களில் கடந்த புதன்கிழமை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஆறு ஆசிய பெண்கள் உள்ளிட்ட 8 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக 21 வயது நபர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

இந்த சம்பவத்தை தொடர்ந்து அட்லாண்டா விரைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆசிய அமெரிக்கர்களை சந்தித்து பேசினார். அதன்பிறகு ஆசிய அமெரிக்கர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அவர், இனவாதம் மற்றும் இனவெறி ஆகியவற்றின் போது தேசம் உடந்தையாக இருக்கக்கூடாது. இனவாதம் மற்றும் இனவெறியை பார்க்கும்போது மவுனமாக இருப்பது அதற்கு உடந்தையாக இருப்பதாகும். நாம் அதற்கு உடந்தையாக இருக்க முடியாது. அதற்கு எதிராக நாம் குரலெழுப்ப வேண்டும். அதற்கெதிராக நாம் செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

 

இதற்கு முன்னதாக, ஜோ பைடன் அட்லாண்டாவிற்கு புறப்பட்ட விமானத்தில் ஏறியபோது இரண்டு, மூன்று முறை தவறி விழுந்தார். அவர் தவறி விழுந்ததற்கு கடுமையான காற்றும் காரணமென கூறப்படுகிறது. ஜோ பைடனுக்கு தற்போது 78 வயதாவது குறிப்பிடத்தக்கது. அவர் தடுமாறி விழும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்