தமிழகத்திலேயே தமிழைக் காக்கப் போராட வேண்டியிருக்கிறது. ’ஒரே நாடு ஒரே மொழி’ என்ற கோஷத்துடன் மாநில மொழிகளின் உரிமைகளை மத்திய அரசு மிதிப்பது என்பது இங்கு வழக்கமாகிவிட்டது. ஆனால் அமெரிக்காவோ, நம் தொன்மைமிகும் செம்மொழியான தமிழுக்கும் உரிய முக்கியத்துவத்தைக் கொடுத்து வியப்பில் ஆழ்த்திவருகிறது.
அமெரிக்காவில் உள்ள மேரிலாந்து மாநிலத்தில், கொரோனா விழிப்புணர்வு குறித்தும் அது தொடர்பான தகவல்கள் குறித்தும் தொன்மைச் சிறப்புமிக்க செம்மொழியான தமிழிலும் அறிவிப்புகளை வெளியிட்டு வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அது மட்டுமல்ல, அந்த மாநிலத்தில் வசிக்கும் முக்கியமான இன மக்களின் மொழிகளிலும் இப்படிப்பட்ட மருத்துவக் குறிப்புகளை அங்கே கொடுத்து வருகிறார்கள்.
முக்கியமான அறிவிப்புகளை அவரவர் தாய்மொழியில் கொடுத்தால்தான் அதனை அவர்கள் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்ற உயரிய நோக்கிலும் இந்த நடைமுறையை அவர்கள் கடைபிடிக்கிறார்கள்.