Skip to main content

அமேசான் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் தமிழ்நாட்டு பெண்...!

Published on 27/02/2019 | Edited on 27/02/2019

அமெரிக்காவை தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் பெப்ஸிகோவின் முன்னாள் தலைவர் இந்திரா நூயி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் பிறந்த அவர், சென்னையில் தனது பள்ளிப் படிப்பையும், பட்டப்படிப்பையும் நிறைவு செய்திருக்கிறார்.

 

indra nooyi


 

2006 முதல் 2018 வரை பெப்ஸிகோன் தலைவர் பொறுப்பில் இருந்த இந்திரா நூயி 2018-ம் ஆண்டு அந்தப் பொறுப்பில் இருந்து வெளியேறினார். அதன்பின் தற்போது அமேசான் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இடம்பெற்றுள்ளார். 
 

அமேசானை பொறுத்தவரையில் இயக்குநர் குழுவில் 11 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 2-வது பெண்ணாக இந்திரா நூயி சமீபத்தில் சேர்த்துள்ளார். இவருக்குமுன் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரோசாலிந்த்த ப்ரூவரை அமேசான் இயக்குநர் குழுவில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
 

அமேசான் நிர்வாக இயக்குநர் குழுவில் உள்ள 11 பேரில் இந்திரா நூயி, ப்ரூவர், ரோசாலிந்த்த ஜேமி கார்லிக், ஜூடித் மெக்ராத், பேட்ரிகா ஸ்டோன்ஸ்ஃபைர் ஆகிய 5 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்