Published on 29/09/2018 | Edited on 29/09/2018
நேற்று இந்தோனேசியாவிலுள்ள சுலவேசி தீவில் முதலில் நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் 7.5 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பின்னர், இந்த எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. ஆனால், உடனடியாக எச்சரிக்கை திரும்பப் பெற்றவுடன் சுனாமி கடலோர பகுதிகளை தாக்கியது. 2 மீட்டர் அளவிலான ராட்சஸ அலைகள் ஊருக்குள் புகுந்தது. சுற்றுலா தளமான அந்த பகுதியில் பல்வேறு மக்கள் சுனாமியால் உயிரிழக்க கூடியிருக்கும். இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படுள்ள நிலையில் இந்த நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் 384 பேர் உயிரிழந்திருப்பதாக இந்தோனேசியா பேரிடர் குழு தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது.