Published on 03/10/2018 | Edited on 03/10/2018
மூன்று நாள் சுற்றுப்பயணமாக டெல்லிக்கு வந்துள்ள ஐநாவின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ்,” ரோஹிங்யா சமூகத்திற்கு பார்க்கப்படும் பாகுபாட்டைபோல நான் வேறு எந்த சமூகத்திற்கும் கண்டதில்லை. நான் பார்த்த மோசமான மனிதாபிமான நெறுக்கடியிலிருந்து ரோஹிங்யா மக்களை மீட்க, வங்காளதேசத்துடன் இணைந்து இந்தியா மியான்மருக்கு அழுத்தம் தர வேண்டும் என்று நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
இதற்கு முன்பாகா, மியான்மரில் இருக்கும் சிறுபான்மையின மக்களான ரோஹிங்யா இசுலாமிய மக்களின் மீது நடத்தப்படும் இராணுவ தாக்குதல் ஒரு இன அழிப்பு என்று ஐநா மற்றும் அமெரிக்கா கூறியது குறிப்பிடத்தக்கது.