ஜப்பானிலுள்ள பணப்பரிவர்த்தனைகள் செய்யும் ஆன்லைன் நிறுவனம் ஒன்றில் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு 60 மில்லியன் அமெரிக்க டலர்கள் திருடப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தொகையில் இதன் மதிப்பு 430 கோடி இருக்கும்.
ஒசாகாவை தலையமைகமாகக் கொண்டு இயங்கிவரும் ஆன்லைன் பணப்பரிமாற்ற நிறுவனத்தில் வாடிக்கையளரின் கணக்கை ஹேக் செய்யப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹேக் செய்ததில் 60 மில்லியன் டாலர்கள் திருடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹேக் செய்யப்பட்ட கணக்கிலிருந்து வேறொருவருக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் மோனோகாயின், பிட்காயின், பிட்காயின் பணம் ஆகியவைற்றையும் திருடியுள்ளனர் என்று அந்நிறுவனத்தின் தலைவர் சாயிப் தெரிவித்துள்ளார். மேலும், வாடிக்கையாளரின் கணக்கை எப்படி முறைகேடாக ஹேக் செய்ய முடிந்தது என்பது குறித்து விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.