அமெரிக்கா நாட்டில் கொலராடோவில் உள்ள டென்வர் சர்தேச விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த ஓட்டுநர் கோன்னீ (Connie) என்பவருக்கு கூகுள் மேப் டீ-டூர் எனும் பெயரில் மாற்று வழி இருப்பதாகக் கூறி அறிவுறுத்தியது. பொதுவாக 43 நிமிடங்களில் செல்ல வேண்டிய இடத்துக்கு 23 நிமிடங்களில் சென்று விடலாம் எனக் காட்டியதை அடுத்து ஓட்டுநர் கோன்னீ தனது பாதையை மாற்றினார். இந்நிலையில் கூகுள் மேப் செய்தியை வைத்து பயணம் சென்ற ஓட்டுநர் சற்று நேரத்தில் பொது வழியற்ற தனியார் சாலையில் யாருமே பயணிக்காத விவசாய வழி பாதையை மாற்றி வந்த ஓட்டுநர் கோன்னீ பாதையை பின் தொடர்ந்து வந்த 100-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களின் வாகனங்கள் சேற்று சகதியில் சிக்கிக்கொண்டது.
கூகுள் மேப்பை நம்பி தவறான முடிவெடுத்து விட்டதாக ஓட்டுநர்கள் புலம்பித் தள்ளினர். சேற்று சகதியில் சிக்கிய வாகனங்கள் மீள முடியாமலும், ஒரு கார் மட்டுமே பயணிக்கக் கூடிய அகலப் பாதையில் வாகனத்தைத் திருப்ப முடியாமலும் தவித்தனர். இந்நிலையில் அங்கு வந்த காவலர்கள் உதவியுடன் பல மணி நேரத்திற்கு பிறகு கார்கள் புறப்பட தொடங்கியது.