Published on 11/12/2019 | Edited on 12/12/2019
இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது நிருபர் ஒருவர் தன்னுடைய மொபைல் போனில் உள்ள புகைப்படம் ஒன்றைக் காட்டி அது குறித்து கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியால் ஆத்திரமடைந்த பிரதமர் ஜான்சன் திடீரென எதிர்பாராத வகையில் அந்த செல்போனை பிடுங்கி தனது சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டார். இது குறித்த வீடியோவை அந்த நிருபர் தனது டுவிட்டர் இணையதளத்தில் பதிவு செய்து வைரல் ஆக்கினார்.
நாளை ஓட்டுப்பதிவு நடக்க உள்ள நிலையில் போரீஸ் ஜான்சன் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் இந்த வீடியோ வைரலானது அவருக்கு பெரும் பின்னடைவே என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.