Published on 26/04/2022 | Edited on 26/04/2022
பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு எலான் மஸ்க் வாங்கியுள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனரும், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவருமான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் உள்ளதாக நீண்ட நாட்களாக கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு எலான் மஸ்கிடம் ஒப்படைக்க ட்விட்டர் நிர்வாகக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டரின் 9 சதவிகித பங்குகள் மட்டும் எலான் மஸ்க் வசமிருந்த நிலையில், தற்போது நிறுவனத்தின் மொத்த பங்குகளும் அவர் வசமாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.