Published on 13/03/2020 | Edited on 13/03/2020
கரோனா வைரஸால் உலகில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,139 ஆக உள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 4,633 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 337 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவிக்கு கரோனாவிற்கான அறிகுறிகள் இருப்பதாகவும், இதனால் வீட்டில் இருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தி உள்ளதாகவும், பரிசோதனைக்கு பின்னரே கரோனா தாக்கமா என தெரியவரும் என சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோயருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.