Published on 30/11/2020 | Edited on 30/11/2020

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஆறு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 14 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் 6.30 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4.35 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14.65 லட்சமாக இருக்கிறது. இந்தியாவில் இதன் பாதிப்பு மிக அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை சீராக குறைய தொடங்கியுள்ளது. இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 94 லட்சத்தை கடந்துள்ளது.