உலகளவில் 209 நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,30,516 ஆக உயர்ந்துள்ளது.அதேபோல் உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,01,828 ஆக அதிகரித்துள்ளது.உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 82,005 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில்,சீனாவில் நேற்று கரோனாவுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.புதிதாக 62 பேருக்கு கரோனா உறுதியானதால் சீனாவில் பாதிப்பு எண்ணிக்கை 81,802 ஆக உயர்ந்துள்ளது.இந்த நாட்டில் கரோனா பாதிப்பால் 3,333 பேர் உயிரிழந்த நிலையில், 77,279 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனிடையே ஹூபே மாகாணத்தில் உள்ள வுகானில் கரோனா பரவலின் தாக்கம் குறைந்ததால் 76 நாட்களுக்குப் பின் ஊரடங்கைத் தளர்த்திக் கொண்டது சீன அரசு.இந்த வுகான் பகுதியில் இருந்து தான் முதன் முதலில் கரோனா உலகம் முழுவதும் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.