Published on 05/12/2020 | Edited on 05/12/2020
சுரங்கத்தினுள் திடீரென கார்பன் மோனாக்சைடு வாயுக் கசிவு ஏற்பட்டதில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சீனாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் யோங்சான் நகரில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம் போல பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது திடீரென சுரங்கத்தின் உள்ளே இருந்து கார்பன் மோனாக்சைடு வாயு, கசிந்துள்ளது. அப்போது சுரங்கத்திலிருந்து வெளியே வர முடியாமல், உள்ளேயே சிக்கிய 18 தொழிலாளர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். ஒருவர் மட்டும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உலகிலேயே அதிக அளவில் நிலக்கரி உற்பத்திச் செய்யும் நாடான சீனாவில், இதுபோன்ற விபத்துகள் நிகழ்வது அண்மைக் காலங்களில் வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது.