210-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா தொற்று இருந்து வருகின்றது. இந்தியாவில் அதன் பாதிப்பு மிக அதிக அளவு காணப்படுகின்றது. பல்வேறு மாநிலங்களில் லட்சங்களை தாண்டி கரோனா பாதிப்பு சென்று கொண்டிருக்கின்றது.
உலக அளவில் இந்தியா கரோனா பாதிப்பில் மூன்றாம் இடத்தில் இருந்து வருகின்றது. முதல் இரண்டு இடங்களை அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகள் பெற்றுள்ளன. தென் அமெரிக்க நாடான பிரேசிலில் 15 லட்சத்துக்கும் அதிகமான கரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நோய் தாக்குதலுக்கு இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டு கரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில், திடீர் திருப்பமாக அந்நாட்டு அதிபர் போல்சனாரோவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் ஒய்வில் இருந்த வந்த அவருக்கு இன்று கரோனா பாதிப்பு உறுதியானது. இதை அவரே தொலைக்காட்சியில் நேரில் தோன்றி நாட்டுமக்களுக்கு தெரியப்படுத்தினார்.