Published on 13/12/2019 | Edited on 13/12/2019
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 71 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
நைஜீரியாவின் இன்னேட்ஸ் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 71 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த தீவிரவாத அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டு அதிபர் தனது எகிப்து பயணத்தை பாதியில் ரத்து செய்து நாடு திரும்பியுள்ளார். தீவிரவாத தாக்குதலால் ஒரே நேரத்தில் 71 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.