Published on 01/03/2019 | Edited on 01/03/2019

ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேடன் பற்றி தகவல் தருபவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அல் கொய்தா அமைப்பின் தலைவனாக இருந்த ஒசாமா பின் லேடன் கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்க படைகளால் சுட்டு கொல்லப்பட்ட பிறகு ஒசாமாவின் மகன் ஹம்சா லேடன் தன்னை அல் கொய்தா இயக்கத்தில் இணைத்துக்கொண்டான். ஹம்சா பின்லேடன், பாகிஸ்தானில், வசிப்பதாகவும், ஆப்கானிஸ்தானில் வசிப்பதாகவும், சிரியாவில் இருப்பதாகவும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகின. ஆனால், இன்னும் உறுதியான தகவல் ஏதும் இல்லை. இந்நிலையில், ஹம்சா லேடன் குறித்து தகவலை அறிய இந்த அறிவிப்பை அமெரிக்க பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது.